Posts

புல்புல்தாரா - நாவலுனுபவம்

 சமீபத்தில் வாசித்து முடித்த பா. ராகவனின் 'புல்புல்தாரா' ஒரு சுவாரசியமான நாவல். தெளிவான கதாபாத்திரங்களும், விறுவிறுப்பான நிகழ்வுகளையும் கொண்டு புனையப்பட்ட ஒரு நெடுங்கதை.    அலகிலா விளையாட்டு, யதி, இறவான் ஆகிய நாவல்களுக்கு பிறகு நான் வாசிக்கும் நான்காவது பாரா நாவல் இது. அவரது சமூகவலைதளத்தை முன்னர் தொடர்ந்து கவணித்து வந்துள்ளேன். அதில் அவரது கருத்துக்களும் பார்வையும் ஆர்வமூட்டக்கூடியாவையாக இருக்கும். அப்போதிலிருந்தே அவரது படைப்புகளை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.  முதலில் வாசித்த அலகிலாவிளையாட்டு நாவல்  நிச்சயம் ஒரு நல்ல படைப்பதான். ஆனால், சிறந்த படைப்பு அல்ல. அடுத்து நான் வாசித்த யதி நாவலும் பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. என்னளவில் அது ஒரு மெகா தொடர்கதை தான்.  அதற்காக ஒரு முழு பதிவையே நாவலை வாசித்து முடித்தவுடன் வெளியிட்டேன்.  பா. ராகவன் தொடர்ச்சியாக பயன்படுதும் சராசரி மொழிதான் இந்நாவல்களை மேழெழும்பவிடாமல் தடுக்கின்றன என்ற எண்ணம் இந்த நான்காவது நாவலை படித்த பிறகு மேலும் உறுதியாகிறது. அவர் பயன்படுத்தும் உவமைகள், வாக்கிய அமைப்பு, கதாபாதிரங்கள் பேசும் மொழியின் தொனி என அனைத்தும் ம

A Self Flamboyant Letter to BR!

Dear Baradwaj Sir, My name is Kishore and I am from Trichy. For the past three years, I have been a dedicated viewer of your movie reviews and I truly admire the way you review films. I may not consider myself as a hardcore movie buff, but I have a very strong belief in Art - as a whole. In every forms of art, from Cave paintings to AI generated outputs, I could see the never ending quest of human beings for eternity and immortality. I have had this romantically ideal approach towards art since childhood but, I couldn't find proper channel to nurture and paraphrase my abstract feelings. I knew that, I should go to the books but, I found difficult to start from the right one. I have gone through many bestsellers and five star’ers (as per Google) both in Tamil and English, which eventually made me to loose faith in my taste itself. Finally, through the same internet, I’ve found the websites of contemporary literary masters of Tamil such as Jeyamohan, S.Ramakrishnan, CharuNivedita,  w

பேசாதவர்கள் - ஜெயமோகன் - வாசிப்பு குறிப்பு

பேசாதவர்கள் - ஜெயமோகன் பேசாதவர்கள் கதையின் மையப் படிமம் அந்த மனிதச்சிறைக்கூண்டு -தூக்குபூட்டு- தான். இப்படியான கொடூர தண்டனைகள் கொடுக்க துளியும் குற்றவுணர்வற்ற சமூகங்களால் தான் இயலும். அவர்கள் எந்தவிதமான உணர்வுபூர்வ பிணைப்பும் இல்லாமல் ஒரு மேலான கடமையை ஆற்றுவதைப் போல் தான் அத்தண்டனைகளை நிறைவேற்றி இருப்பார்கள். வளர்ச்சிப் பாதையில் செல்லும் எந்த ஒரு சமூகமும் இப்படியான வரலாற்றை திரும்பி பார்க்கையில் இக்கொடூர அடக்குமுறையின் அவலம் உறைத்து, குற்றவுணர்வு ஏற்படும். ஆனால், அதற்காக 'நாங்கள் செய்தது அனைத்துமே பிழையானவை' என்று பகிரங்க மன்னிப்பு கோர முடியாது. அது -தங்களால் சமைக்கப்பட்ட- தங்கள் வரலாற்றை, அடையாளத்தை முற்றிலும் நிராகரிப்பதற்கு ஒப்பாகும்.  இத்தகைய இக்கட்டான சூழல் தான் மாடன்கள் முளைக்கும் விளைநிலமாகிறது. ஒடுக்கவும் வேண்டும் அதன் குற்றவுணர்விலிருந்து மீளவும் வேண்டும் என்ற மனநிலையின் விளைவாகதான் மாடன்கள் தோன்றுகிறார்கள்.  ஆயினும் ஒரு சமூகம் எத்தனை பலிச்சின்னங்களைதான் எழுப்ப முடியும். எனவே காலப்போக்கில் நேரடி ஒடுக்குமுறையை மெல்ல மெல்ல குறைத்துக்கொள்ளும். அதன் கசப்பான எச்சங்கள் இருட்

மைத்ரி : துளியின் பூரணம்

Image
  மைத்ரி : துளியின் பூரணம் . சரியாக ஓராண்டுக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில்  வெளியான எமர்சனின் 'இயற்கையை அறிதல்' புத்தகத்தை வாசித்தேன். அதன் கவித்துவ உரைநடையும், ஒரே நேரத்தில் அந்தரங்கமாகவும் உலகுதழுவியும் பேசும் அதன் த்வனியும் என்னை வெகுவாக ஈர்த்தது. நூலின் பல இடங்களில் அடிக்கோடிட்டு மீண்டும் மீண்டும் வாசித்தேன். அதுபோதாமல், அடிக்கோடிட்ட வரிகளை தட்டச்சிட்டு என் வலைப்பக்கத்தில் பதிவேற்றினேன். பின்னர் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தியதால் சில நாட்களில் அந்தப் பதிவும் என் நினைவிலிருந்து அகன்றுபோனது. சமீபத்தில், முன்னர் பதிவேற்றிய அந்த பக்கத்தின் சுட்டி jeyamohan.in தளத்தில் பகிரப்பட்டது. நாள்தவறாமல் ஜெ அவர்களின் தளத்தை வாசிப்பவன் நான். அப்படியொருநாள் என் பதிவை அவர் தளத்தில் கண்டதும் மனம் பெருங்களிப்படைந்தது. எமர்சனின் அழியா வரிகளுக்குள் சென்று மீண்டும் அந்த கவித்துவ மனநிலையில் சில நாட்கள் சஞ்சரிக்க முடிந்தது. ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் அனிச்சையாக மனம் எமர்சனின் வரிகளில் சென்று முட்டிக்கொண்டு இருந்தது. எழுத்தாளர் அஜிதன் அவர்கள் எழுதிய

இயற்கையை அறிதல் - எமர்சன்

  எமர்சனின் இயற்கையை அறிதல் (தமிழில்: ஜெயமோகன்) பாஸ்டனில் ரால்ஃப் வால்டோ எமர்சனின் வீட்டுக்குச் சென்றபோது மிகப்பெரிய ஓர் உள எழுச்சியை அடைந்தேன். அங்கே நின்றிருக்கவே முடியாத அளவுக்கு.  விழிகளில் நீர்கசிவது எல்லாம் என் இயல்பல்ல, ஆகவேதான் அழவில்லை.  ஆனால் அந்தத் தருணத்தை ஒவ்வொரு கணமும் என என்னால் உணரமுடிகிறது இன்று.  - ஜெயமோகன் ( மரபை கண்டடைதல் ) இயற்கையை அறிதல் புத்தகத்திலிருந்து சில வரிகள் : நட்சத்திரங்கள் மட்டும் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை ஒரு இரவுக்கு மட்டும் தோன்றுமென்றால் மனிதர்கள் அதை எந்த அளவிற்கு விரும்பியிருப்பார்கள்? அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் கண் உள்ளவனுக்கு மட்டும் உரிமையான ஒரு நிலம் தொடுவான் வரை உள்ளது. சூரியன் மனிதர்களின் கண்களை மட்டுமே ஒளி பெறச் செய்கிறது. ஆனால் குழந்தையின் கண்ணையும் இதயத்தையும் அது சுடரால் நிரப்புகிறது. இயற்கையை நேசிப்பவன் யார்? எவனுடைய வெளிப்புலன்களும் உட்புலன்களும் பரஸ்பரம் சரியாக பொருந்திப் போகின்றனவோ அவன்தான். இயற்கையானது சோகக் காட்சிக்கும் நகைச்சுவைக் காட்சிக்கும் மிகச் சரியாக பொருந்தும் ஒரு நாடகப் பின்புலம். இயற்கை, மனிதனின் சேவையில் கச்சாப

ஜீவிதத்தின் கண்ணீரும் குருதியும்: அசோகமித்திரனின் தண்ணீர் நாவல்

வெகு நாட்களாக என் புத்தக அலமாரியில் வாசிக்கப் படாமலிருந்தது அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவல். சிறுநாவல் தானே இன்று வாசிக்கலாம் நாளை வாசிக்கலாம் என்று அப்படியே தள்ளிப்போய்விட்டது. இப்போது இதை வாசித்து முடித்தவுடன் ஒரு மேதையின் மாஸ்டர்ப்பீஸை இத்தனை நாள் தவறவிட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வைத்துவிட்டது. தண்ணீர் பஞ்சத்தில் அல்லற்படும் சென்னை நகரமே இந்நாவலின் கதைக்களம். தண்ணீருக்காக மக்கள் விடிவதற்கு முன்பிருந்தே தெருத்தெருவாக அலைகிறார்கள்.  'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கிணங்க மனதின் சமநிலை, குடும்ப அமைப்பு, சமூகச் சூழல், அரசாங்க செயல்பாடு என ஒவ்வொன்றும் எப்படி அமையாமல் அல்லற்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் காட்சிப்படுத்தும் நாவல். இக்கதையில் பெண்களே பிரதான பாத்திரங்களாக உள்ளனர். இருவேறு துயர வாழ்வினூடாக பயணப்படும் இரு சகோதரிகள் சாயா - ஜமுனா, வாழ்வின் குரூர உகிர்களைக் கடந்து துணிச்சலுடன் வாழும் டீச்சரம்மா, நோய்ப்படுக்கையில் மனம் பிறழ்ந்து கிடக்கும் ஜமுனாவின் தாய், இந்நாவலின் உச்ச கணத்தில் வரும் தெலுங்கு பிராமண கிழவி எனப் பெண்களின் வழியாகவே அக்காலகட்டத்தின் இருளை காட்சிப்படுத்

யதி : சன்யாசம் சிலாகிப்பு சறுக்கல்

பா. ராகவன் எழுதிய யதி நாவல் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொண்ட நான்கு சகோதரர்களின் கதை.  ஒரே வீட்டின் நான்கு சகோதரர்கள் வெவ்வேறு காலங்களில் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார்கள். இந்நால்வரும், தங்கள் தாயார் மரணத்தை நெருங்குவதை அறிந்து மீண்டும் சந்திக்கின்றன. பொதுவாகவே துறவு என்பது மனகொந்தளிப்பு சார்ந்தது. அகத்தில் நிகழும் கொந்தளிப்புகளுக்கு புறத்தே விடை தேடுவது. துறவு சார்ந்து எழுதப்படும் நாவல்கள் பொதுவாக கொந்தளிப்போடு தான் இருக்கும். ஆனால், இந்நாவலின் கதைசொல்லியாக கடைசிமகன் விமல் வருகிறான். வாழ்வை ஒரு பறவையின் இறகைபோல் வாழ்ந்து கடப்பவன். எதன் மீதும் விருப்பும் வெறுப்பும் இன்றி அக்கணத்தில் தோன்றுவதை நிகழ்த்துபவன். இப்படி ஒருவன் மூலம் கதைசொல்லும் போது ஒரு அபூர்வமான அனுபவம் ஏற்படுகிறது. மற்றொரு ஈர்கக்கூடிய கதாபாத்திரமாக வருபவன் இரண்டாம் அண்ணன் 'வினய்'. சாக்த பாதையை தேர்ந்தெடுத்து பல்வேறு சறுக்கல்களை சந்தித்து தான் விழையும் இடத்தை அடையமுடியாது தவிப்பவன்.  அடுத்ததாக, தன்னை ஒரு இயக்கத்தில் பொருத்திக்கொண்டு ஒரு 'நல்ல' துறவியாக வரும் மூன்றாவது அண்ணன் வினோத். இறுதியாக, தன்னை

திறந்து பார்த்த வாசல்கள்

Image
 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை வாசித்த புத்தகங்களின் பட்டியல் : 1. இயந்திரம் - மலையாற்றூர் ராமகிருஷ்ணன் 2. வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர் 3. பதின் - எஸ்.ராமகிருஷ்ணன் 4. பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் 5. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி (2-5-20) 6. வெண்முரசு - களிற்றியானை நிரை - ஜெயமோகன் (6-5-20) 7. வெண்முரசு - தீயின் எடை - ஜெயமோகன் (9-5-20) 8. புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம் (12-5-20) 9. அன்புள்ள ஏவாளுக்கு - Alice Walker (14-5-20) 10. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் (15-5-20) 11. இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் (20-5-20) 12. கடல்புரத்தில் - வண்ணநிலவன் (23-5-20) 13. விஷ்ணுபுரம் - ஜெயமோகன் (31-5-20) 14. நினைவுதிர் காலம் - யுவன் சந்திரசேகர் (3-6-20) 15. இந்திய பயணம் - ஜெயமோகன் (5-6-20) 16. வெண்முரசு - இமைக்கணம் - ஜெயமோகன் (1-7-20) 17. ராஜன் மகள் - பா.வெங்கடேசன் (2-7-20) 18. Siddhartha - Herman Hesse (4-7-20) 19. The Little Prince - Antonie Saint Exupery (9-7-20) 20. Animal Farm - George Orwell (10-7-20) 21. A Christmas Carol - Charles Dickens (10-7-20) 22. The Art of War - Sun

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்

Image
  நிலம் பூத்து மலர்ந்த நாள் இன்றைய தமிழ் நிலத்தின் சிறப்புப் பண்புகளாக வீரம், காதல், விருந்தோம்பல் போன்ற விழுமியங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விழுமியங்கள் எப்படி, யாரால் முடிவுசெய்யப்படுகின்றன? இவை எங்கு வேர்கொண்டுள்ளன? போன்ற கேள்விகளை கேட்டுப்பார்த்தோமானால், "செம்புல பெயல் நீர் போல்...", "யாதும் ஊரே யாவரும் கேளீர்!" போன்ற வரிகள் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்டு, அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டு வரும் விழுமியங்களாக இவை விளக்கமளிக்கப்படும். ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சிறப்புகள் அனைத்தும் அதன் ஆதி இலக்கிய ஆக்கங்களிலே வேர்கொண்டுள்ளன. அதனடிப்படையில் நம் தமிழ் மொழியின் விதைக்களஞ்சியமாக திகழ்வது 'சங்க இலக்கிய' பாடல்களாகும். பல்வேறு புலவர்கள், பலதரப்பட்ட நிலங்களிலிருந்து வெவ்வேறு காலங்களில் எழுதியவற்றுள் காலத்தால் அழியாமல் எஞ்சிநிற்கும் பாடல்களின் தொகுப்பே சங்க இலக்கியம் எனப்படுகிறது. இச்சங்க இலக்கிய பாடல்களில் வெளிப்படும் தொல் தமிழ் நிலத்தின் பண்புகள், தரிசனங்கள், வாழ்கைபாடுகள் ஆகியவற்றின் சாரம் கொண்டு எழுதப்பட்ட நாவலே 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. மலைய

குமரித்துறைவி : சிறு குறிப்பு

Image
  குமரித்துறைவி - ஜெயமோகன் அபராமான வாசிப்பனுபவத்தை அளித்தது இக்கதை. தேன்குடத்தில் தூக்கி வீசப்பட்டவன் போல எத்தனை நெகிழ்வுகள் எத்தனை விம்மல்கள எத்தனை தித்திப்புகள். பொதுவாக நான் இந்த சடங்குகள் திருவிழாக்கள் போன்றவற்றின் மேல் பெரிய ஆர்வமுடையவன் அல்ல. ஆனால் இக்கதையில் வெளிப்படும் மானுட நாடகத்திற்கும் மனஎழுச்சிகளுக்கும் முன்னால் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு முழுதாக திளைக்க முடிந்தது. கலையின் நோக்கமே இதுதானோ? எத்தனை விழிகளை திறக்கிறது, எத்தனை திரைகளை விலக்குகிறது, எத்தனை சுவைகளை அளிக்கிறது.. ஒரு சிறு வாழ்விற்குள் பல பெரு வாழ்வுகளை திணித்து நம்மை விரிவடைய செய்து, விராட ரூபனாக்குகிறது. இதை ஒட்டுமொத்தமாக தொகுக்கவே நிச்சயம் பல வாசிப்புகள் தேவைப்படும். எதை சொல்வது எதை விடுவது... மீனாக்ஷிஅம்மன், சுந்தரேஸ்வரர், ஆதிகேசவன், சாஸ்தா, முத்தாலம்மன், பொல்லாப்பிள்ளையார் என கண் நிறைய வைக்கும் சூட்சும கதாபாத்திரங்கள் ஒருபுறம்.  சர்.மார்த்தாண்டன், சிறமடம் திருமேனி, வேணாடு அரசர், கங்கம்மா தேவி, நாயக்கர் தளவாய் என வியப்பில் ஆழ்த்தும் வரலாற்று பாத்திரங்கள் மறுபுறம். பெரிய மனிதர்களின் பெரு மனவிரிவுகள், நுண்ணி

அடிக்கோடுகளின் வழியே அலகிலா விளையாட்டு

  அலகிலா விளையாட்டு பா. ராகவன் > உடலின் உறுதிக்கும் மனத்தின் உறுதிக்கும் ஒருங்கே சவால் விடுகிற சமுராய் வீரன் - குளிர். > குளிர். காரம். மிளகாய்ச் சட்னி. ரொட்டி. பருப்புக்கூட்டு. பகவான். > நதிப்பாதையெங்கும் கூழாங்கற்களைக் கொட்டிவைத்தது யார்? கடவுள் தான் என்றால் அவரது அழகுணர்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். > ஒன்று புரிந்தது. வாழ்வின் ஆகப்பெரிய அர்த்தம் வாழ்ந்து தீர்ப்பது தான். > கால்மாட்டில் தலைவைத்துப் படுப்பதன்மூலம் அறையைப் புரட்டிப்போட்டதாக நினைத்துக்கொள்வது மாதிரி. > வெளிச்சம், புத்தியின் விழிப்புநிலைக் குறியீடு. > ஆம்பர் கலைந்து பச்சை விழும் தருணம். > அவரவர் வலிகளின் வீரியத்தை அங்கீகரிக்க முடியுமே தவிர அறியவா முடிகிறது? > என் பரம்பொருள், என் சந்தோஷம். என் பரம்பொருள், என் பிரக்ஞை. அதை இழக்காதவரை எனக்குத் தோல்வியில்லை. > அற்ப உதவிகளைப் பெரிது படுத்துவதன் மூலம் சார்ந்திருத்தலெனும் உயரிய தத்துவத்தைக் கொச்சைப்படுத்தலாகாது. > துறந்திருக்கிறோம் என்கிற உணர்வைத் துறப்பது. > கண்ணுக்குத் தென்படாத ஓர் அபூர்வ அப்பம். உனக்கு ஒரு கிள்ளு. அவனுக்கொ

வெக்கையும் சாரலும் : பூமணியின் வெக்கை நாவல்

வெக்கையும் சாரலும்: பூமணியின் வெக்கை நாவல் பதினைந்து வயது சிறுவன் செய்யும் ஒரு வஞ்சின கொலைக்கு பிறகான ஏழு நாட்களாக விரியும் கதை.  இதற்குள்ளாக அந்நிலத்தின் விவரிப்புகள், உறவுகளின் பாசப் பிணைப்புக்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என ஒரு அழகிய உலகை படைத்து காட்டிருக்கிறார் பூமணி. 'அசுரன்' படத்தில் உள்ளதில் ஒரு சதவீத வன்முறை கூட இந்நாவலில் இல்லை என உறுதியாகச் சொல்லலாம். அத்திரைப்படம் ஒரு வகையில் உணர்ச்சியைத் தூண்டி 'அவன அடி! கொல்லு!!' என்று பார்வையாளர்களைச் சொல்ல வைப்பதாக இருக்கும். ஆனால் இந்நாவல் முடிவை நோக்கிச் செல்ல செல்ல மனம் ஒரு அலாதியான நிறைவை அடைகிறது. சிதம்பரம் கண்களின் வழியே நாம் காணும் அந்த நிலம் மிக ரம்மியமாகவும் நுட்பங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அதை முழுக்க உள்வாங்கி spontaneousஆக செயல் படுபவனுக்கு அந்நிலம் வேண்டிய நேரத்தில் உணவும் நீரும் அளித்து பொத்தி பாதுகாக்கிறது. தாயை அறிந்த மகனுக்கு கிடைக்கும் சலுகைகள் போல. 150 பக்கமே உள்ள சிறிய நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஆழமும் தனித்துவமும் மிக்கதாய் உள்ளன.  சிதம்பரம் - அய்யா சிவசாமி - அம்மா - கொலை செய்யப்பட்ட அவன

லாசர் : மரணமும் மீட்சியும்

 லாசர் : மரணமும் மீட்சியும் பள்ளி வாழ்க்கை முழுக்க வெவ்வேறு கிறித்தவ கல்வி நிறுவனங்களில் பயின்றதால், கிறித்தவம் சார்ந்த தொன்மங்களையும் விவிலிய கதைகளையும் ஓரளவுக்கு நண்பர்கள் மூலம் அறிந்துள்ளேன்.  துயரில் கனிந்து சரிந்த விழிகளும், அருள் புரியலாமா வேண்டாமா என்பது போல் பாதி விரிந்த விரல்களும், தோளில் பரவிய அடர் பழுப்பு குழல்களுமாகக் காட்சி அளித்த தேவகுமாரனை என்றும் என் அணுக்கத்தில் உணர்ந்துள்ளேன். ஜெயமோகன் எழுதிய 'வெறும்முள்' , 'உயிர்த்தெழுதல்' போன்ற கதைகளும் பால் சக்கரியா எழுதிய சில கதைகளும் அவ்வணுக்கத்தை மேலும் நெருக்கமாக உணரவைத்துள்ளன. இந்த லாசர் கதையில் வரும்  //திருக்கோயிலில் பைபிள் வாசிக்கும்போது அது அங்கிருக்கும் எவரிடமும் உரையாடுவதுபோல் இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் எவரோ ஒருவரிடம் தனியாகப் பேசுவதுபோல ஒலிக்கிறது.// இவ்வரிகளை மிக நன்றாக உணர்ந்துள்ளேன். வாசித்தவுடன் அந்நாட்கள் அனைத்தும் நினைவில் ஓடி மறைந்தது. லாசரை உயிர்த்தெழ வைத்ததே ஏசுவின் மகிமைகளில் உச்சமான ஒன்று. அப்படி ஒரு தொன்மத்தை, இடையான்குடியில் நடக்கும் ஒரு நிகழ்வோடு பிணைந்து கதையாக்கியுள்ள விதம் அபாரமானத

பவா செல்லதுரைக்கு கடிதம்

அன்புள்ள பவா, நான் கிஷோர் குமார், திருச்சியில் வசிக்கும் கல்லூரி மாணவன். பல மாதங்களாக எழுத நினைத்துத் தயங்கி, இன்று ஏதோ ஒரு உந்துதலில் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். உங்களுக்கு ஒரு ஆயிரம் நன்றிகள் கூறி இக்கடிதத்தைத் தொடங்க விரும்புகிறேன். 2 ஆண்டிற்கு முன்பு புத்தகங்கள் வாசிக்கும் விருப்பம் ஏற்பட, இணையதளங்களில் தேடி அலைந்த பொழுது தான் தங்களை youtubeல் கண்டடைந்தேன். உங்கள் பெயரே எனக்கு முதலில் தயக்கத்தை உண்டு பண்ணியது , "என்ன பேர் இது?!" என்று முதலில் தவிர்த்து வந்த நான் பின்னர் உங்கள் பெரும் ரசிகனாக மாறினேன். உங்கள் சொற்கள் காட்சிகளாகக் கனவுகளையும், கண்ணீராகக் கண்களையும், அன்பால் நெஞ்சத்தையும் நிறைத்தது. நன்றிகள் அதற்காக மட்டுமல்ல, இன்று நான் என்னை ஒரு வாசகனாகவே அறிமுகம் செய்வேன். நீங்கள் கூறிய ' ஊமைச்செந்நாய்' கதை வழியே நான் ஜெயமோகனை சென்றடைந்தேன். அவரது எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படி சொற்களால் விளக்குவது என்று தெரியவில்லை. வில்லின் நாணைப் போல் அவர் என்னுள் எதனையோ சுண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரது தளம் இன்றைய சலிப்பும் வெறுப்பும் நிரம்பிய ச

வெள்ளையானை - ஜெயமோகன் - கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன், வெள்ளையானை வாசித்தேன். இன்று மானுடத்தின் அடிப்படைகளாக விளங்கும் ஜனநாயகம், சுதந்திரம் போன்ற விழுமியங்களைப் பெறச் சிந்தப்பட்ட குருதியையும் விழிநீரையும் பதிவு செய்த படைப்பு. எத்தனை சிலுவையேற்றங்களையும் எத்தனை உயிர்த்தெழல்களையும் மனிதன் கடந்து வந்திருக்கிறான்... ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாள் மட்டுமே நீடித்து, மறுநாள் சுவடே இல்லாமல் துடைத்தழிக்கப்பட்ட அந்த போராட்டம் வரலாற்றில் மிகச் சிறு சலனம்தான். ஆனால், வரலாறு ஒரு கடல். ஆழத்தில் உறைந்திருக்கும் 'டெக்டானிக் ப்ளேட்'ன் சிறு சலனம் தான் ஆழிப்பேரலையாக எழுகிறது. அப்படி அவர்களின் பிற்கால எழுச்சிகளுக்கு வழிவகுத்த முதற்கனல் தான் அந்த போராட்டம். ஏய்டன் - உங்கள் புனைவுலகின் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் ஒருவன். அவன் அகம் முழுக்க ஐயர்லாந்தின் விரிந்த புல்வெளிகள் தான் நிறைந்துள்ளது. அப்புல்வெளிகளில் ஒரு கையில் வாளும் மறுக்கையில் குழலும் ஏந்தி நிற்கும் தேவதையாக (அல்லது சாத்தனாக) ஷெல்லி. அவனது அகம் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. கவிஞனாகவும் படைவீரனாகவும் ஊசலாடிக்கொண்டே இருக்கிறான். ஆம், பசும்புல்வெளியாகவும் நீலக்கடலாக

மனப்பிறழ்வும் கலையும் - சாரு நிவேதிதா - கடிதம்

  அன்புள்ள சாரு, உங்கள் 'கோபி கிருஷ்ணன் உரை'யில் பங்கேற்றேன். இதுதான் நான் பங்கேற்கும் முதல் கூட்டம்.  மிகவும் அருமையாக இருந்தது. ஒரு பேராசிரியரைப் போல் வார்த்தை வார்த்தையாக விளக்கினீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியம் மீதுள்ள passion அவ்வுரையை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. (பொதுவாகப் பேராசிரியர்களிடம் உள்ள குறை என்பது இந்த passion இல்லாமைதான்.) நான் இவ்வுரையை ஒருவாறு தொகுத்துக்கொண்டேன். 1. Authority (power) is against madness.  Literature strongly condemns  the sickness of the society so, the Authority is also against Literature.  Therefore, literature shows more affinity towards madness.  2. As the literature grasps more and more madness in it, the text will become more and more unpleasant for the common readers. It is not only against the authority of the society but it will also rebel against the authority of one's 'self' itself.  3. The only difference between a man and a madman is the language. Man's language has reason and logic which a