Posts

Showing posts from December, 2020

லாசர் : மரணமும் மீட்சியும்

 லாசர் : மரணமும் மீட்சியும் பள்ளி வாழ்க்கை முழுக்க வெவ்வேறு கிறித்தவ கல்வி நிறுவனங்களில் பயின்றதால், கிறித்தவம் சார்ந்த தொன்மங்களையும் விவிலிய கதைகளையும் ஓரளவுக்கு நண்பர்கள் மூலம் அறிந்துள்ளேன்.  துயரில் கனிந்து சரிந்த விழிகளும், அருள் புரியலாமா வேண்டாமா என்பது போல் பாதி விரிந்த விரல்களும், தோளில் பரவிய அடர் பழுப்பு குழல்களுமாகக் காட்சி அளித்த தேவகுமாரனை என்றும் என் அணுக்கத்தில் உணர்ந்துள்ளேன். ஜெயமோகன் எழுதிய 'வெறும்முள்' , 'உயிர்த்தெழுதல்' போன்ற கதைகளும் பால் சக்கரியா எழுதிய சில கதைகளும் அவ்வணுக்கத்தை மேலும் நெருக்கமாக உணரவைத்துள்ளன. இந்த லாசர் கதையில் வரும்  //திருக்கோயிலில் பைபிள் வாசிக்கும்போது அது அங்கிருக்கும் எவரிடமும் உரையாடுவதுபோல் இருப்பதில்லை. வேறெங்கோ இருக்கும் எவரோ ஒருவரிடம் தனியாகப் பேசுவதுபோல ஒலிக்கிறது.// இவ்வரிகளை மிக நன்றாக உணர்ந்துள்ளேன். வாசித்தவுடன் அந்நாட்கள் அனைத்தும் நினைவில் ஓடி மறைந்தது. லாசரை உயிர்த்தெழ வைத்ததே ஏசுவின் மகிமைகளில் உச்சமான ஒன்று. அப்படி ஒரு தொன்மத்தை, இடையான்குடியில் நடக்கும் ஒரு நிகழ்வோடு பிணைந்து கதையாக்கியுள்ள விதம் அபாரமானத