புல்புல்தாரா - நாவலுனுபவம்

 சமீபத்தில் வாசித்து முடித்த பா. ராகவனின் 'புல்புல்தாரா' ஒரு சுவாரசியமான நாவல். தெளிவான கதாபாத்திரங்களும், விறுவிறுப்பான நிகழ்வுகளையும் கொண்டு புனையப்பட்ட ஒரு நெடுங்கதை.   

அலகிலா விளையாட்டு, யதி, இறவான் ஆகிய நாவல்களுக்கு பிறகு நான் வாசிக்கும் நான்காவது பாரா நாவல் இது. அவரது சமூகவலைதளத்தை முன்னர் தொடர்ந்து கவணித்து வந்துள்ளேன். அதில் அவரது கருத்துக்களும் பார்வையும் ஆர்வமூட்டக்கூடியாவையாக இருக்கும். அப்போதிலிருந்தே அவரது படைப்புகளை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. 

முதலில் வாசித்த அலகிலாவிளையாட்டு நாவல்  நிச்சயம் ஒரு நல்ல படைப்பதான். ஆனால், சிறந்த படைப்பு அல்ல. அடுத்து நான் வாசித்த யதி நாவலும் பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. என்னளவில் அது ஒரு மெகா தொடர்கதை தான்.  அதற்காக ஒரு முழு பதிவையே நாவலை வாசித்து முடித்தவுடன் வெளியிட்டேன். 

பா. ராகவன் தொடர்ச்சியாக பயன்படுதும் சராசரி மொழிதான் இந்நாவல்களை மேழெழும்பவிடாமல் தடுக்கின்றன என்ற எண்ணம் இந்த நான்காவது நாவலை படித்த பிறகு மேலும் உறுதியாகிறது. அவர் பயன்படுத்தும் உவமைகள், வாக்கிய அமைப்பு, கதாபாதிரங்கள் பேசும் மொழியின் தொனி என அனைத்தும் மிகவும் பரிச்சியமாகவும், சாதரணமாகவும் உள்ளதால், வாசகனாகிய எனக்கு அவர் உருவாக்கும் உலகிருக்குள் தீவிரமாக நுழைய சீராமமாக உள்ளது. அல்லது எனக்கு அதில் பெரிய ஆர்வம் இல்லாமல் உள்ளது. மொழிதான் படைப்புக்கான அடிப்படை த்வணியயும் தாளத்தையும்  உருவாக்குகிறது. அது அமையாவிட்டால் பின்னர் படைப்பு சுவாரசியத்தையும், விறுவிருப்பையும் நம்பியே இயங்க வேண்டிய நிலை உருவாகும். நாம் வாழும் இக்காலதில் மேற்கூறிய இரு காரணங்களுக்காக, ஒரு படைப்பை வாசிக்க வேண்டும் என்று எவ்வித கட்டாயமும் வாசகனுக்கு இல்லை அதற்க்கு பதிலாக சௌகரியமாக அவன் ஒரு சாதாரண வெப் தொடரையோ, ஒரு திரில்லர் படத்தையோ பார்த்தால் போதுமே!

இதை மீறி மொழிசார்ந்தும், கூறுமுறை சார்ந்தும் புதிய முயற்சிகளுடன் அவர் எழுதிய நாவல் 'இறவானை' என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. தன்மை - முன்னிலை என நகரும் அதன் கதையாடலும், கதைகளத்தின் அந்நியதன்மையும் பெரும் அயர்ச்சியைதான் ஏற்படுத்தியது. 

ஓட்டுமொத்ததில் பா. ராகவன் தமிழில் தொடர்ச்சியாக எழுதிவரும் ஒரு நல்ல எழுத்தாளர். ஆனால், அவரைச் சிறந்த எழுத்தாளர் வரிசையில் வைத்து நிலைநிறுத்தும் படைப்பை அவர் இன்னும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது.  

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்