இயற்கையை அறிதல் - எமர்சன்
எமர்சனின் இயற்கையை அறிதல் (தமிழில்: ஜெயமோகன்) பாஸ்டனில் ரால்ஃப் வால்டோ எமர்சனின் வீட்டுக்குச் சென்றபோது மிகப்பெரிய ஓர் உள எழுச்சியை அடைந்தேன். அங்கே நின்றிருக்கவே முடியாத அளவுக்கு. விழிகளில் நீர்கசிவது எல்லாம் என் இயல்பல்ல, ஆகவேதான் அழவில்லை. ஆனால் அந்தத் தருணத்தை ஒவ்வொரு கணமும் என என்னால் உணரமுடிகிறது இன்று. - ஜெயமோகன் ( மரபை கண்டடைதல் ) இயற்கையை அறிதல் புத்தகத்திலிருந்து சில வரிகள் : நட்சத்திரங்கள் மட்டும் ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை ஒரு இரவுக்கு மட்டும் தோன்றுமென்றால் மனிதர்கள் அதை எந்த அளவிற்கு விரும்பியிருப்பார்கள்? அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் கண் உள்ளவனுக்கு மட்டும் உரிமையான ஒரு நிலம் தொடுவான் வரை உள்ளது. சூரியன் மனிதர்களின் கண்களை மட்டுமே ஒளி பெறச் செய்கிறது. ஆனால் குழந்தையின் கண்ணையும் இதயத்தையும் அது சுடரால் நிரப்புகிறது. இயற்கையை நேசிப்பவன் யார்? எவனுடைய வெளிப்புலன்களும் உட்புலன்களும் பரஸ்பரம் சரியாக பொருந்திப் போகின்றனவோ அவன்தான். இயற்கையானது சோகக் காட்சிக்கும் நகைச்சுவைக் காட்சிக்கும் மிகச் சரியாக பொருந்தும் ஒரு நாடகப் பின்புலம். இயற்கை, மனிதன...