அடிக்கோடுகளின் வழியே அலகிலா விளையாட்டு

 அலகிலா விளையாட்டு

பா. ராகவன்

> உடலின் உறுதிக்கும் மனத்தின் உறுதிக்கும் ஒருங்கே சவால் விடுகிற சமுராய் வீரன் - குளிர்.

> குளிர். காரம். மிளகாய்ச் சட்னி. ரொட்டி. பருப்புக்கூட்டு. பகவான்.

> நதிப்பாதையெங்கும் கூழாங்கற்களைக் கொட்டிவைத்தது யார்? கடவுள் தான் என்றால் அவரது அழகுணர்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

> ஒன்று புரிந்தது. வாழ்வின் ஆகப்பெரிய அர்த்தம் வாழ்ந்து தீர்ப்பது தான்.

> கால்மாட்டில் தலைவைத்துப் படுப்பதன்மூலம் அறையைப் புரட்டிப்போட்டதாக நினைத்துக்கொள்வது மாதிரி.

> வெளிச்சம், புத்தியின் விழிப்புநிலைக் குறியீடு.

> ஆம்பர் கலைந்து பச்சை விழும் தருணம்.

> அவரவர் வலிகளின் வீரியத்தை அங்கீகரிக்க முடியுமே தவிர அறியவா முடிகிறது?

> என் பரம்பொருள், என் சந்தோஷம். என் பரம்பொருள், என் பிரக்ஞை. அதை இழக்காதவரை எனக்குத் தோல்வியில்லை.

> அற்ப உதவிகளைப் பெரிது படுத்துவதன் மூலம் சார்ந்திருத்தலெனும் உயரிய தத்துவத்தைக் கொச்சைப்படுத்தலாகாது.

> துறந்திருக்கிறோம் என்கிற உணர்வைத் துறப்பது.

> கண்ணுக்குத் தென்படாத ஓர் அபூர்வ அப்பம். உனக்கு ஒரு கிள்ளு. அவனுக்கொரு கிள்ளு. எத்தனை கிள்ளினாலும் குறைப்படாத ஆன்ம அப்பம் - ஆன்மா, பிரம்மம்.

> நெருக்கத்தில் பார்க்கும்போது அந்தச் சீமாட்டியின் வசீகரம் அப்படியொன்றும் ரசிக்கும்படி இருக்காது போலிருக்கிறது - மரணம்.

> காலில் செருப்பு கூடாது. கல் குத்தவேண்டும். குளிருக்கு அந்தக் குத்தல் தான் அருமருந்து.

> பழைய நினைவுகளின் நட்சத்திரக் குப்பைகளை.

> உள்முக நாட்டம் உள்ளவன் தன் மொழியை மனத்துக்குள் அடக்கவேண்டும். மனத்தை, விழித்துக்கொண்டிருக்கிற புத்தியில் அடக்கவேண்டும். புத்தியை ஆனந்தமயமான ஆன்மாவில் ஒடுக்கவேண்டும். ஆன்மாவை அமைதிப்பெருங்கடலான இறைவனிடம் ஒடுக்கவேண்டும்....

> அது நிரந்தரமானது. அது அழிவற்றது. அது உட்கார்ந்தபடி வெகுதூரம் செல்கிறது. அது படுத்துக்கொண்டே பயணம் மேற்கொள்கிறது. இன்ப வடிவானது. துன்ப வடிவானதும் அதுவே. ஒளிமயமான அதனை நான் கண்டுகொண்டேன். ஓம்.ஓம்.

> தத்துவங்கள் பெரிய பிரச்சனை. உள்ளே நுழையாதவரை அதன் முரட்டுக் கரங்களுக்கும் நமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. என் வழி எனக்கு. அதன் வழி அதற்கு.

> இறைவன் சத்தியத்தால் ஆனவன். சத்தியம் ஆன்மாவின் வெளிப்பாடு. ஆன்மா நற்செயல்களால் சமைக்கப்படுவது. நற்செயல்கள் நற்சிந்தனைகளின் விளைவு. சிந்தனை புத்தியின் தடம் மாறாத்தன்மையின் பாற்பட்டது. புத்தி உணவினால் சமைக்கப்படுவது. உணவு வேள்வியில் பிறப்பது. வேள்வி சத்தியத்தில் ஒடுங்குவது. நீயே சத்தியம். நீயே பூரணம். நீயே அது. ஓம். ஓம்.

> மனத்துக்குப் போடவேண்டிய தொண்ணூற்றேழு தையல்கள் குறித்து வேதத்தில் ஒரு சுலோகம் உண்டு.

> தொண்டைத்தண்ணி வத்தவத்தத் தான் அந்த சுகத்தோட சொகுசு புரியும் - ஆசிரியமை

> சந்தோஷங்களைப் போலவே நிஜமான துக்கத்தின் கனமும் பூரணமாக அறிமுகமாகாத பெரும்பான்மை சமூகத்தின் பிரதிநிதி நான்.

> நம்பிக்கைக்குக் கூட வசப்படாதெனில் வேறென்னதான் அதன் விருப்பம்?

> உயிர்களெல்லாம் மகிழ்வாயிருக்கப் படைக்கப்பட்டவை. பயிர் பச்சைகளெல்லாம் மனிதகுலத்தின் மகிழ்ச்சிக்கென படைக்கப்பட்டவை. ஓடும் நதிகளும் வீசும் காற்றும் பொழியும் மழையும் தாங்கும் புவியும் உயிர்களின் மகிழ்ச்சிக்கெனவே சமைக்கப்பட்டவை என்று காண். எங்கும் மகிழ்ச்சியே தங்குக. எங்கும் ஆனந்தம் அலைபுரளட்டும். எங்கும் எப்போதும் நம்பிக்கையின் அலையடிப்பு பிரகாசிக்கட்டும். ஓம். ஓம். ஓம்.

> “அர்த்தம் என்று தனியாக ஒன்றை ஏன் தேடுகிறீர்கள்? செயல் மட்டும் தான் முக்கியம். அர்த்தம் தேடுவது நம் வேலையல்ல. செயல், செயல் மட்டுமே."

> ஒரு மருந்துக்கடைக்காரரின் திறமை நூலகருக்கு இருந்தாக வேண்டும்.

> மனத்தில் தெளிவாக வடிவமெடுத்துவிட்ட எந்தக் கருத்துக்கும் சொற்களின் துணை அத்தனை பிரமாதமாக வேண்டியிருக்காது போலிருக்கிறது.

> மனிதன் நம்பிக்கை வைக்கிற விஷயங்களே அவனைக் கைவிடும் என்றால் வாழ்வுக்கான பற்றுக்கோடுதான் என்ன?

> எப்போதும் நீ பாடம் நடத்திக்கொண்டே இருந்தாலும் எப்போதாவது தான் புரியும்படி நடத்துகிறாய்.

> தன்வரைக்குமான தெளிவும் தீர்மானமுமல்லவா கடவுளைப் பிறப்பிக்கிறது! காந்தியின் அஹிம்சையும் புத்தரின் ஒழுக்கமும் என் குருவின் கல்வியும்.

> செயலையும் தியானத்தையும் எவனொருவன் சேர்த்து அறிகிறானோ அவன் செயல்களால் மரணத்தைக் கடந்து தியானத்தால் பிறவாநிலையை அடைகிறான்.

-------

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்