அடிக்கோடுகளின் வழியே அலகிலா விளையாட்டு
அலகிலா விளையாட்டு பா. ராகவன் > உடலின் உறுதிக்கும் மனத்தின் உறுதிக்கும் ஒருங்கே சவால் விடுகிற சமுராய் வீரன் - குளிர். > குளிர். காரம். மிளகாய்ச் சட்னி. ரொட்டி. பருப்புக்கூட்டு. பகவான். > நதிப்பாதையெங்கும் கூழாங்கற்களைக் கொட்டிவைத்தது யார்? கடவுள் தான் என்றால் அவரது அழகுணர்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். > ஒன்று புரிந்தது. வாழ்வின் ஆகப்பெரிய அர்த்தம் வாழ்ந்து தீர்ப்பது தான். > கால்மாட்டில் தலைவைத்துப் படுப்பதன்மூலம் அறையைப் புரட்டிப்போட்டதாக நினைத்துக்கொள்வது மாதிரி. > வெளிச்சம், புத்தியின் விழிப்புநிலைக் குறியீடு. > ஆம்பர் கலைந்து பச்சை விழும் தருணம். > அவரவர் வலிகளின் வீரியத்தை அங்கீகரிக்க முடியுமே தவிர அறியவா முடிகிறது? > என் பரம்பொருள், என் சந்தோஷம். என் பரம்பொருள், என் பிரக்ஞை. அதை இழக்காதவரை எனக்குத் தோல்வியில்லை. > அற்ப உதவிகளைப் பெரிது படுத்துவதன் மூலம் சார்ந்திருத்தலெனும் உயரிய தத்துவத்தைக் கொச்சைப்படுத்தலாகாது. > துறந்திருக்கிறோம் என்கிற உணர்வைத் துறப்பது. > கண்ணுக்குத் தென்படாத ஓர் அபூர்வ அப்பம். உனக்கு ஒரு கிள்ளு. அவனுக...