பவா செல்லதுரைக்கு கடிதம்
அன்புள்ள பவா, நான் கிஷோர் குமார், திருச்சியில் வசிக்கும் கல்லூரி மாணவன். பல மாதங்களாக எழுத நினைத்துத் தயங்கி, இன்று ஏதோ ஒரு உந்துதலில் தங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன். உங்களுக்கு ஒரு ஆயிரம் நன்றிகள் கூறி இக்கடிதத்தைத் தொடங்க விரும்புகிறேன். 2 ஆண்டிற்கு முன்பு புத்தகங்கள் வாசிக்கும் விருப்பம் ஏற்பட, இணையதளங்களில் தேடி அலைந்த பொழுது தான் தங்களை youtubeல் கண்டடைந்தேன். உங்கள் பெயரே எனக்கு முதலில் தயக்கத்தை உண்டு பண்ணியது , "என்ன பேர் இது?!" என்று முதலில் தவிர்த்து வந்த நான் பின்னர் உங்கள் பெரும் ரசிகனாக மாறினேன். உங்கள் சொற்கள் காட்சிகளாகக் கனவுகளையும், கண்ணீராகக் கண்களையும், அன்பால் நெஞ்சத்தையும் நிறைத்தது. நன்றிகள் அதற்காக மட்டுமல்ல, இன்று நான் என்னை ஒரு வாசகனாகவே அறிமுகம் செய்வேன். நீங்கள் கூறிய ' ஊமைச்செந்நாய்' கதை வழியே நான் ஜெயமோகனை சென்றடைந்தேன். அவரது எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படி சொற்களால் விளக்குவது என்று தெரியவில்லை. வில்லின் நாணைப் போல் அவர் என்னுள் எதனையோ சுண்டிவிட்டுக்கொண்டே இருக்கிறார். அவரது தளம் இன்றைய சலிப்பும் வெறுப்பும் நிரம்பிய ச...