May 21, 2020

வெண்முரசு - களிற்றியானை நிரை : சிறு குறிப்பு

களிற்றியானை நிரை : தொல்நகரின் எழுச்சி.

வெண்முரசு நாவல் வரிசையில் 24 ஆவது நாவலான களிற்றியானை நிரை அஸ்தினபுரியின் எழுச்சியை காட்டுகிறது. 
ஆதன் என்ற தென்குமரி நிலத்தவன் 'அஸ்தினபுரி' என்ற சொல்லின் ஆணையால் தன்னகர் நீங்கி செல்கிறான். அவன் மட்டும் அல்ல அனைத்து திசைகளிலும் அஸ்தினபுரி மக்களை அழைக்கிறது. அஸ்தினபுரியின் தொல்குடிகள் நகர் நீங்குகிறது. ஆள் அரவமே இல்லாத நிலையில் அனைத்து நீர்க்கடன்களையும் முடித்து யுதிஷ்டிரன் நகர் புகுகிறார். 
சம்வகை, சுரேசர், யுயுத்சு சேர்ந்து நகரை மீட்கிறார்கள். 

அஸ்தினபுரி யின் தொல் யானைகள் நகரை நிறைக்கும் காட்சி ஒரு உச்சம். தொல்குடிகள் அகல புதுவெள்ளம் போல் புதுமக்கள் நகரை நிறைகிறார்கள். அவர்களின் வழியே சென்று நுட்பமாக ஆட்சி புரிகின்றன ஆட்சியாளர்கள்.
 நான்கு தம்பியர் நான்கு திசை நோக்கி சென்று வென்று நகர் அரசருக்கு பரிசுகளுடன்(Hammurabi code, oyster, ladakh crystal, The last word Bird)  பாபிலோனிய தொல்கதைகளும் இடம்பெறுகிறது. மற்றொரு அமைச்சர் சாரிகர் துவாரகை செல்கிறார். உத்தரைக்கு பரிட்சீத் குறைமாத்தில் பிறக்கிறான், பீதர் நாட்டினர் அவனை சிப்பியில் வைத்து காக்கின்றனர் உத்திரை உயிர் விடுகிறாள். அன்னையின்(திரௌபதி) ஆட்சி காண இந்திரப்ரஸ்தத்திலும் மக்கள் கூடுகிறார்கள். யுயுத்சு திரௌபதியை அழைத்து வருகிறான். நகரம் பெருகிக்கிக்கொண்டே வருகிறது. சம்வகை மேலும் கூர் கொண்டுகொண்டே வருகிறாள். அர்ஜுனன் கொண்டு வந்த பறவை பீஷ்மருக்கான இறுதி சொல்லை அளிக்கிறது. 
தீக்ஷ்ணன் - சார்வாகர் வழியே ராஜசுய நிகழ்ச்சி நடக்கிறது. திரௌபதி, ஆதன் சுடராட்ட கலியனை வழிபட்டு நிற்கிறாள்.
என்ற காட்சியோடு இந்நாவல் முடிகிறது.