மைத்ரி : துளியின் பூரணம்
மைத்ரி : துளியின் பூரணம் . சரியாக ஓராண்டுக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியான எமர்சனின் 'இயற்கையை அறிதல்' புத்தகத்தை வாசித்தேன். அதன் கவித்துவ உரைநடையும், ஒரே நேரத்தில் அந்தரங்கமாகவும் உலகுதழுவியும் பேசும் அதன் த்வனியும் என்னை வெகுவாக ஈர்த்தது. நூலின் பல இடங்களில் அடிக்கோடிட்டு மீண்டும் மீண்டும் வாசித்தேன். அதுபோதாமல், அடிக்கோடிட்ட வரிகளை தட்டச்சிட்டு என் வலைப்பக்கத்தில் பதிவேற்றினேன். பின்னர் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தியதால் சில நாட்களில் அந்தப் பதிவும் என் நினைவிலிருந்து அகன்றுபோனது. சமீபத்தில், முன்னர் பதிவேற்றிய அந்த பக்கத்தின் சுட்டி jeyamohan.in தளத்தில் பகிரப்பட்டது. நாள்தவறாமல் ஜெ அவர்களின் தளத்தை வாசிப்பவன் நான். அப்படியொருநாள் என் பதிவை அவர் தளத்தில் கண்டதும் மனம் பெருங்களிப்படைந்தது. எமர்சனின் அழியா வரிகளுக்குள் சென்று மீண்டும் அந்த கவித்துவ மனநிலையில் சில நாட்கள் சஞ்சரிக்க முடிந்தது. ஏதேனும் ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் அனிச்சையாக மனம் எமர்சனின் வரிகளில் சென்று முட்டிக்கொண்டு இருந்தது. எழுத்தாளர் அஜிதன் அவர்கள் எழுதி...