An Excerpt from 'நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி. மோகன். --------------------- நம் காலத்தின் பெறுமதிமிக்கக் கலைகளில் ஒன்றான நவீன ஓவியம், இன்றளவும் நம்மிடையே அதிகமும் அறியப்படாத, பிடிபடாத புதிர்ப் பிரதேசம். இதன் காரணமாக, சிந்தனைகளிலும் அழகியலிலும் நம்மை மேம்படுத்தக்கூடிய செழுமையான அனுபவங்களை நாம் இழந்துகொண்டிருக்கிறோம். பொதுவாக, இன்றைய பிற கலைச் சாதனங்களோடு ஆர்வமுடன், ஈடுபாட்டுடன், முனைப்புடன் இயங்கும் பலரும்கூட, நவீன ஓவியம் குறித்து அசட்டையான மனோபாவமே கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு கேலிப் பொருளாகப் பார்த்து நையாண்டி செய்யும் மனோபாவமும் இருக்கிறது. நம்முடைய சமகாலத்தில் சில தமிழ்த் திரைப்படங்கள், நவீன ஓவியத்தை நகைச்சுவைக் காட்சிக்கான ஒரு பொருளாகவே பயன்படுத்தியிருக்கின்றன. நவீன ஓவியம் என்பது ஒரு பேத்தல் வேலை என்றும், அதை ரசிப்பதாக பாவனை செய்பவர்கள் பம்மாத்துப் பேர்வழிகள் என்பதுமான எண்ணத்தை வெகு மக்களிடம் உருவாக்கும் கைங்கரியத்தை அவை மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகின்றன. ஒரு கலை சார்ந்த படைப்பாளிகள், இன்னொரு கலை சார்ந்த படைப்பாளிகளை எவ்விதப் புரிதலும் இல்லாமல் நையாண்டி செய்வ...
தமிழின் மிக முக்கிய நாவல்களுள் ஒன்றான ஜேஜே: சில குறிப்புகளை நான்கு மாதங்களுக்கு முன் மிக ஆர்வத்துடன் வாங்கி , எப்போதும் கதைகள் வசிப்பது போல் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். படித்து முடித்து மூடி வைக்கும்போது "சரி okay . இப்ப இந்த நாவல் என்ன சொல்ல வருது? சரளமான கவித்துவமான மொழி இருக்கு ஆனா கதை என்ன ?" என்ற கேள்வியுடனும் குழப்பத்துடனும் புத்தகத்தை மூடி ராக்கில் வைத்துவிட்டேன். இந்நூலின் பின்னுரையில் சுகுமாரன் கூறுவதைப் போல் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட தமிழின் நவீன நாவல் இதுவே. எக்கச்சக்கமான விமர்சனங்கள், வாசிப்பனுபவங்கள் இணையத்தில் குவிந்துள்ளது. தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஜெயமோகன் இதனை பட்டியலிட்டுள்ளார். மேலும் அவரது " சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் " என்னும் நூலில் ஒரு பத்து பக்கத்திற்கு ஒரு முறையாவது இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தையும் , இதன் மதிப்பையும் பற்றி கூறியுள்ளார். நமக்கு மட்டும் ஏன் இது சாதாரணமாக தெரிகின்றது என்று சலிப்புடன் இதை ஒதுக்கி வைத்துவிட்டேன். Sundara Ramasamy பின்னர் ஒருநாள்...
நிலம் பூத்து மலர்ந்த நாள் இன்றைய தமிழ் நிலத்தின் சிறப்புப் பண்புகளாக வீரம், காதல், விருந்தோம்பல் போன்ற விழுமியங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விழுமியங்கள் எப்படி, யாரால் முடிவுசெய்யப்படுகின்றன? இவை எங்கு வேர்கொண்டுள்ளன? போன்ற கேள்விகளை கேட்டுப்பார்த்தோமானால், "செம்புல பெயல் நீர் போல்...", "யாதும் ஊரே யாவரும் கேளீர்!" போன்ற வரிகள் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்டு, அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டு வரும் விழுமியங்களாக இவை விளக்கமளிக்கப்படும். ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சிறப்புகள் அனைத்தும் அதன் ஆதி இலக்கிய ஆக்கங்களிலே வேர்கொண்டுள்ளன. அதனடிப்படையில் நம் தமிழ் மொழியின் விதைக்களஞ்சியமாக திகழ்வது 'சங்க இலக்கிய' பாடல்களாகும். பல்வேறு புலவர்கள், பலதரப்பட்ட நிலங்களிலிருந்து வெவ்வேறு காலங்களில் எழுதியவற்றுள் காலத்தால் அழியாமல் எஞ்சிநிற்கும் பாடல்களின் தொகுப்பே சங்க இலக்கியம் எனப்படுகிறது. இச்சங்க இலக்கிய பாடல்களில் வெளிப்படும் தொல் தமிழ் நிலத்தின் பண்புகள், தரிசனங்கள், வாழ்கைபாடுகள் ஆகியவற்றின் சாரம் கொண்டு எழுதப்பட்ட நாவலே 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. மலைய...
Comments
Post a Comment