பின்தொடரும் நிழலின் குரல் - நாவலனுபவம்
பள்ளிப்பருவத்தில் ' புரட்சி ' என்ற சொல் அறிமுகமானவுடன் ஏற்பட்ட கிளர்ச்சியால் தான் நான் சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, லெனின், மாவோ போன்றவர்களை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அவர்களே என் ஆதர்ச நாயகர்கள் ஆனார்கள். குறிப்பாக லெனி ன் , அவரைப்பற்றிய ஒரு சிறு நூலை 'Prodigy' நிறுவனம் வெளியிட்டது. ஒரு மாணவனாக என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த புத்தகம். அவரை போலவே ஒரு 'படித்த' புரட்சியாளர் ஆகவேண்டுமென்று விரும்பினேன். தொடர்ச்சியாக இடதுசாரி நூல்களை வாசித்து வந்ததால் 'ரஷ்யா' என்னும் 'புரட்சிப்பொண்ணுலகம்' பூமியில் உள்ளது என்று அறிந்தேன். என் மனமும் அவ்வாறே பதிய வைத்துக்கொண்டது. பன்னிரண்டாம் வகுப்பில் வாசிப்பு முற்றிலுமாக தடைப்பட்டது. ஆயினும் ரஷ்யா பற்றிய பிம்பம் என்னுள் மாறவில்லை. பின்னர் கல்லூரி சேர்ந்தவுடன் மீண்டும் வாசிப்பை தொடங்கினேன். அப்போது தான் ஜெயமோகனின் அறிமுகம் கிடைத்தது. அவரது எழுத்துக்கள் ஒரு நீர்சுழல் போல் என்னை உள்ளிழுத்து கொண்டது. அவரது பெரும் நாவலான விஷ்ணுபுரத்தை வாசித்த அனுபவம் இன்னும் என்னுள் ஒரு கனவு போல் நிறைந்துள்ளது. அதனை தொடர்ந்...