Posts

Showing posts from June, 2020

உறை குருதி

  உறை குருதி சுடுகாட்டு சாம்பல் மேட்டின் மேல் மெல்ல ஊர்ந்தது ஓர் நச்சரவம். பத்தி விரித்து சூழ நோக்கி பிளநா நீட்டி காற்றில் ஹிஸ்ஸிட்டு நீளுடல் சுருட்டி அமைந்தது. அணைந்த சிதைக்குள் உறையும் கதுப்பில்  உடல் வெம்மை கூட்டியது. ஏனெனில் அரவங்கள் கோல்டு-ப்லடட். வெதுப்பில் கண் சொக்க ஓர் அசைவை உணர்ந்தது. சாம்பல் புகை சுற்றி படர எழுந்தமர்ந்தது ஓர் உடல். தன் சிறுமணி மூளைக்குள் உயிர்வாழ்திரவம் சுரக்க அவ்வுடலின் கழுத்து நாகத்தை சுருண்டு இறுக்கியது நச்சரவம். கை நாகங்களும் கால் நாகங்களும் மேல், கீழ், கிடை என அளைந்தடங்கியது.  உடல் இறுக்கம் தளர தன் இறுக்கம் தளர்த்தி சுற்றி விழியொட்டியது. அனைத்து சிதை மேலும் உடல் தூக்கி பார்த்து மீண்டும் படுத்தன நிழலிருள் உருவங்கள்.  நாம் மட்டும் கோல்டு-ப்லடட் இல்லை போலும் என தன் உடல் சுருட்டி நிலை மீண்டு வெதுவெதுப்பான இரத்த ஊறலை கேட்டது. ***